Goto Invition Page
Donation
 
செய்திகள் & நிகழ்வுகள்
அன்னதானம் நடைபெறும் நாட்கள்
சித்திரை
புதன்
08-05-2019
-----------------------

*************************
வைகாசி
புதன்
22-05-2019
-----------------------

*************************
சிறப்பு விசேஷங்கள்
சித்திரை
செவ்வாய்
07-05-2019
அக்ஷயத் திரிதியை
--------------------------

*************************
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் அபிஷேகம்
சித்திரை
சனி
27-04-2019
மாலை 6 மணி
--------------------------

*************************
 

முகப்பு பக்கம் வரவேற்கிறது

                                  திருச்சிற்றம்பலம்

என்னை நினைத்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை

விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்

அரசு மகழ் அத்தி முகத்தான்.

                              - நம்பியாண்டார் நம்பி
 

            அன்னதானத்தின் சிறப்பைப் பற்றியும் நம்முடைய டரஸ்டின் நோக்கங்கள் பற்றியும் வெளியிடப்படுகிறது. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் கடந்த பத்து வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் அன்னதானம் செய்து வருகிறது.

        திருநாரையூரில் அன்னதானம் செய்வதன் நோக்கம் யாதெனில் பக்தர்கள் காலையிலேயே கிளம்பி பல ஊர்களிலிருந்து இங்கு அர்ச்சனை தரிசனம் செய்கிறார்கள். அவர்கள் மறுபடியும் தத்தம் ஊர்களுக்கு செல்ல அதிக நேரம் ஆகிறபடியாலும் நம் ஊர் சிறிய ஊராக இருப்பதாலும் பக்கர்கள் (விரதம் இருப்பவர்கள் தவிர) பசியோடு இருக்க கூடாது என்றும் இந்த அன்னதானம் செய்து வருகிறோம்.

        இந்த அன்னதானமானது கடந்த 9.7.2001 அன்று முதல் நடைபெறுகிறது. கடந்த 28.6.2002 அன்று இராண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், கணபதி ஹோமம், தேவார இசை நிகழ்ச்சியும், மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் இந்த நூலின் முதல் பதிப்பு வெளியீடு மற்றும் சொற்பொழிவுகளோடு; நடைப்பெற்றது;

திருமுறைக் காட்டிய விநாயகர் (ஸ்தல வரலாறு)

       சைவத்திற்கு ஆதாரம் தேவாரம், தேவாரம் உலகறிய மூலாதாரமாய் உள்ளவர் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார்.

         உளி கொண்டு செதுக்காமல் தானாகவே தோன்றிய ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், ஸ்ரீசுயம்பிரகாசர் பொல்லாதவர்கட்கும் நன்மையே செய்வதால் பொல்லாப் பிள்ளையார் என்றனர்.

         பூலோக கைலாயம் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது.

         திருஞான சம்பந்தர் செல்வத் திருநாரையூர் என்றும் திருநாவுக்கரசர் நாரையூர் அண்ணல் என்றும் பாடிச் சிறப்பித்துள்ளனர்.


    இறைவன் பெயர்  :      ஸ்ரீ சௌந்தரேஸ்வரர்
    இறைவி பெயர்   :      ஸ்ரீ திரிபுரசுந்தரி
    ஸ்தல விருக்ஷம்  :      புன்னை மரம்
   தீர்த்தம்  :  ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள காருண்ய தீர்த்தம்.

மிருகண்டு முனிவர் ஈசனை நோக்கித் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கலைக்க கந்தர்வன் என்னும் அரக்கன் முற்பட்டான். சாது மிரண்டால்? நாரையாகக் கடவது எனச் சாபம் கொடுத்தார்.கந்தர்வன் தன் தவறை உணர்ந்து பாவ விமோசனம் வேண்டிணான். அவ்வாறே திருநாரையூர் சௌந்தரேஸ்வரரை நாரை உருவிலே தினமும் வந்து நந்நீர் கொணர்ந்து வழிப்பட்டார். அக்கடும் மழையிலும், குளிரிலும் நாரை தன் சிறகுகளை எல்லாம் இழந்தும், தத்தித் தத்தி தவந்து வந்து இறைவனை வழிபட நற்கதி பெற்றது. நாரை முக்தி பெற்ற ஊரே திருநாரையூர்.

         ஆதிசைவர் மரபில் வந்த அனந்தேச சிவாச்சாரியார் ஆலயபூஜை செய்து வந்தார். நைவேத்தியத்தை விநாயகர் உண்டார் என நாள் தவறாமல் கூறி வந்தார். சிறுபாலகனாகிய அவரது தவப்புதல்வன் நம்பி ஒருநாள் அமுது படைத்தார் விநாயகர் உண்ணாததால் தம் தலையை கருங்கல் சுவற்றில் மோதிக் கொள்ள, விநாயகர் நம்பி பொறு எனத் தடுத்து ஆட்கொண்டு அருந்தினார். இச் செய்தி காட்டுத் தீ என எங்கும் பரவியது.

         இராஜராஜ அபய குல சேகர மகாராஜ பூபதி என்னும் சோழமன்னன் சிறந்த சிவ பக்தர். சிவனடியார்கள் சிலர் தங்களுக்கு தெரிந்த மூவர் அருளிய பதிகங்களுள் சில பாடல்களைப் பாடினர்கள். முழுவதும் மன்னன் கேட்டார். அதனைப் பெற திருநாரையூர் சென்றால் விடைகிடைக்கும் என்றனர்.

          திருமுன்னர் படைத்த அமுதினை நம்பி ஆண்டார் நம்பி வேண்ட விநாயகர் அருந்தினார். தேவாரம் வேண்டும் என விண்ணப்பிக்க சிதம்பரம் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் உள்ளது காட்டுவோம் எனக் கூறி எழுந்தருளிக் காட்டினார்.

          அறையோ பூட்டிக் கிகதவை திறக்க மன்னர் தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினார். உரியோர் வந்தால் திறக்கலாம் என்றார். மதிநுட்பம் நூலோடு உடைய மன்னர் மூவர் சிலைகளையும் நன்கு அலங்கரித்து எழுந்தருளச் செய்தார்.

         பனை ஓலையில் எழுதப்பட்ட பதிகங்கள் கறையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. எண்ணெய் குடங் குடங்களாக ஊற்றப்பெற்று கறையான்களைப் போக்கி கண்டெடுத்த பதிகங்கள் 796 மட்டில்


திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள்       :  384
திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள்          :  312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள்  :  100

இப்பதிகங்கள் நஞ்சையும் அமுதமாக்கும், மாண்ட பிள்ளையையும் உயிர்பெறச் செய்யும் சக்தி உடையது.

           இப்பதிகங்களுக்குப் பண் அமைக்க யாழ்ப்பாணர் மரபில் வந்த எருக்கத்தம் புலியூரைச் சேர்ந்த ஏந்திசைப் பாடினி என்ற ஊமைப்பெண், விநாயகர் அருளால் பேசும் திறமை பெற்று பண் அமைத்தார்.
வந்த தீவினைகள், வரும் தீவினைகள் போக்கி, பதினாறு வகைச் செல்வங்களைப் பெற்று வையத்துள் வாழ்வாங்குவாழ நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே? எனும் வாக்கின்படி ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் பொற்பாதம் போற்றி வணங்கி வழிபடுவோம்.


நம்பி ஆண்டார் நம்பி குருபூஜை

             நம்பி ஆண்டார் நம்பி குருபூஜை விழா வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

                                  சுபமஸ்து

 
 
28471
 
 
 
  Copyright © Sri Pollap Pillayar Annadhaanam Trust.All rights reserved Designed by : TAG Info Solutions India Pvt. Ltd.,