திருச்சிற்றம்பலம்
விரத மகிமை & பலன்கள்
ஸ்ரீ சங்கட ஹர சதுர்த்தி விரத மகிமை
செவ்வாய் கிழமை வரும் சங்கட ஹர சதுர்த்தி மற்றும் மஹா சதுர்த்தி விரதம் இருக்க மிகவும் விசேஷம் உண்டு. சங்கட ஹர சதுர்த்தி அன்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சுத்த தண்ணீரில் ஸ்நானஞ் செய்து திருநீறு மற்றும் குங்குமம் இட்டுக் கொண்டு முதலில் அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வந்து தங்களுடைய குறைகளை சொல்லி விநாயகர் சன்னதியில் இன்று விரதம் இருக்கிறேன்;: என் குறைகளை தீர்க்க வேண்டும் என்று ப்ரதிக்ஞை(வைராக்கியம்) எடுத்துக்கொண்டு தங்களுடைய வேலைகளைத் தொடங்குங்கள். மாலையில் உங்கள் வேலையை முடித்துக் கொண்டு சுத்தமாக ஸ்நாஞ் செய்து(தலைகுளித்து) திருநீறு, குங்குமம் அணிந்து கொண்டு ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்று தங்களால் முடிந்ததை(அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம், மற்றும் தேங்காய் விடல்) போன்றவைகளை செய்து விட்டு வீட்டுக்கு வந்து சந்திரன் உதயமானதும் பார்த்து தரிசித்து விட்டு புதிய உணவாக சாப்பிடலாம். உப்புமா போன்ற(பலகாரம்) வைகளும் சாப்பிடலாம்.
இவற்றிலெல்லாம் முக்கியம் அன்றைய தினம் முழுவதும் எந்த வேலையிருந்தாலும் வேலை செய்யும் போதும்(காலை, மாலை உணவு கூடாது, பால் பழம் போன்றவை அருந்தலாம்). மாலையிலும் இரவு சந்திர தரிசனம் வரையிலும் ஸ்ரீ விநாயகரின் அகவல் பாடல்கள் தெரிந்தவற்றை நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியம்.
இந்த விரதம் இருப்பதால் நாம் நினைத்தது நடக்கும். நல்ல தொழில் வாய்ப்பு, திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடக்கும், குழந்தை பேறு வேண்டுவோர்க்கு குழந்தை பிறக்கும், செல்வம் வேண்டுவோர்க்கு செல்வம் கிடைக்கும். மிகவும் கஷ்டப்படுவோர்க்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று விநாயகர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தலைசிறந்தது அன்னதானம்
தலைசிறந்தது அன்னதானம்
ஒரு சமயம் அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன் பரத்வாஜ முனிவரை அணுகித் தானங்களுள் சிறந்தது எது என்று கேட்டான். அதற்கு அவர் தானங்களுள் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது காலமறிந்து செய்யும் அன்னதானம். அதைவிடச் சிறந்தது பிதுர் தினத்தில் (அமாவாசை அன்னதானம் அளித்தல்) அதைவிடச் சிறந்தது நதிதீரத்தில் அன்னதானம் செய்தல். அதைவிட மிகச் சிறந்தது சிவாலயத்தில் அன்னதானம் அளித்தல்
திருச்சிற்றம்பலம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமினை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே ! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா. |
சுபமஸ்து |