வேதத்தில் அன்னதானம்
அன்னநநிந்த்யாத் - தத்வ்ரதம் அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்! நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்! தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்! ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!
(தைத்ரீயோப நிஷத் - ப்ருகுவல்லி) |
பொருள் : அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம்.
அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். – அது விரதம். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. – ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். தைத்ரியோப நிஷத்தில் வரும் எக்காலத்திலும் பொருந்தும் சிந்தனை. பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் உயரிய தானம். தானங்களில் சிறந்த தானம். எனவே தான் திருநாரையூரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம்முடைய ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்; கருணையால் தான் 16.3.2002 முதல் தமிழக அரசின் ஆலயங்களிலும் தொடர்ந்து தினமும் நடைபெற்று வருகிறது என்பது திண்ணம். உதாரணமாக
இந்த விநாயகருடைய அருளால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது. இன்று ஆலயங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது என்பதில் ஐயமில்லை.
அன்னபூரணி ஸ்லோகம்
ஆன்னபூர்ணே சதா பூர்ணே சங்கரப்ராணவல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி!! |
உலக மக்களின் பசிப் பிணியைப் போக்க பராசக்தி அன்னபூரணியாக அவதரித்து காசியில் அருள் புரிந்து கொண்டிருக்கும் அன்னபூரணியின் இந்த ஸ்லோகத்தை தினமும் சாப்பிடும் போது சொல்லி வந்தால் என்றைக்கும் உணவிற்கு குறைவு வராது.
சுபமஸ்து |