|
வள்ளலார் வாசகம்
உ |
திருச்சிற்றம்பலம்
வள்ளலார்
ஒருமுறை தன்னுடைய அண்னன் சபாபதி பிள்யையின் வருத்தத்திற்கு ஆளான ராமலிங்கம் பசி எடுத்தபோது தாங்கிக் கொண்டார். அண்ணனின் நண்பர்களிடையேயோ அல்லது உறவினர்களிடையேயோ சென்று உதவி வேண்டியதில்லை. ஒரு வேளை உணவும் உண்டதில்லை. இறவு வீட்டிற்கு வந்தபோது அண்ணியார் கொடுத்த உணவு தான் அவரைக் காப்பாற்றி வந்தது. இதுதான் பிற்காலத்தில் அவரை பசிப்பிணி மருத்துவராகவும் உயிர் இரக்கம் கொண்டவராகவும் ஆக்கியது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று திருவருட்பாவில் பாடியுள்ளார்.
அன்னதானம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக வடலூரில் எல்லா உயிர்களையும் தம் உயிராகவே எண்ணிய அவரது உள்ளம் உயிர்களின் பசியை இயன்ற அளவு போக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று விரும்பி 23.5.1867 ல் சத்திய தர்மசாலையை நிறுவினார்;.
சுபமஸ்து |
|
|
|