திருச்சிற்றம்பலம்
எதிர் கால திட்டங்கள்
சங்கடங்கள் தீர்ந்து போக அன்னதானமே சிறந்த வழி சங்கடஹர சதுர்த்தி அன்று ஆனைமுகப் பெருமனை திருநாரையூர் திருத்தலத்தில் தரிசித்து மனமுருக வேண்டினால் போதும் சங்கடங்கள் தூள் தூளாகும்.
ஆனைமுகப்பெருமானை வேண்டுவதோடு அவரது அடியார்களுக்கு அன்னதானம் அளிப்பது மிகச்சிறந்த பலனைத் தரும்.
ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி திருநாரையூரில் எழுந்தருள் பாலிக்கும் ஸ்ரீ பொள்ளபிள்ளையார் சன்னதியில் நடக்கும் அன்னதானப் பெரும் தொண்டில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.
ஸ்ரீ பொள்ளாபிள்ளையார் அன்னதான டிரஸ்ட்
ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் அன்னதான டிரஸ்டி 9.7.2001 ல் தொடங்கி 23/10/02ல் முறையாக பதிவு செய்து 15ம் ஆண்டை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது.
சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னர்குடி பாதையில் 18 கி.மீ தொலைவில் திருநாரையூர் அமைந்துள்ளது.
இந்த திருநாரையூரில் அன்னதான கூடம் அமைக்க வேண்டும் அதற்கு நிலம் வாங்க ரூ …….. ம் கூடம் அமைக்க(Building) செலவு சுமார் ரூ …….. செலவாகிறது இதற்கு தாங்களால் முடிந்ததை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு சங்கடஹர சதுர்த்தி தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. இப்புண்ணிய செயலுக்கு தங்களையும் ஆட்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்பணிக்கு காசோலை / வரைவோலை அல்லது மணியார்டர் (DD / Cheque & M.O) மூலமாக கொடை அளிக்கலாம். |