திருச்சிற்றம்பலம்
திருமுறை (பெரியபுராணம்)
மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதி சூடும் அண்ணலார் அடியற்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் உண்மை ஆம் எனில் உலகர் முன் வருக! என உரைப்பார்.
திருமூலர் திருமந்திரம் தானச் சிறப்பு ஆர்க்கும் இடுமின்! அவர் இவர் என்னன்மின் பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன் மின் காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே - திருமூலர்
பொருள்:எவரேயாயினும் அவர்க்குக் கொடுங்கள். அவர் உயர்தோர் இவர் தாழ்ந்தோர் என எண்ணாதீர்கள். வரும் விருந்தினரை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள். பழம் பொருளைப் போற்றி காவாதீர்கள். இம்மை மறுமையில் வேட்கை உடையவரே. மிக விரைவாக உண்ண வேண்டாம். காக்கைகள் உண்ணும் போது மற்ற காகங்களை அழைத்து உண்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நம்பியாண்டார் நம்பிகள் அருளிய விநாயகர் திருவிரட்டைமணி மாலை 11ம் திருமுறை நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் மீது அருளிச் செய்த திருப்பாடல்கள் பலவற்றுள் பின்வரும் இரண்டு பாடல்கள் சிந்திப்பதற்குரியன. இவற்றைப் பக்தியுடன் ஓதினால் நம் துன்பங்கள் நீங்கும். சுவர்க்க லோகானுபவமும் கிட்டும்.
திருச்சிற்றம்பலம் அல்லல் களைந்தான்றன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழநீர் கட்கும் திருநாரையூர்ச் சிவன்சேய் கொங்கெழதார் ஐங்கரத்த கோ.
இதன் பொருள்: இதன் பொருள்: உழவர்கள் நெல் வயல்களிலுள்ள செங்கழுநீர் மலர்களைக் களைந்து எறிவார்கள்ஃ அத்தகைய நீர்வளம் மிக்க வயல்கள் நிறைந்த திருநாரையூரில் உள்ள சிவபெருமானுடைய திருக்குமாரனாகிய ஐந்து கரத்தோடு கூடிய விநாயகப் பெருமான் தன்னை வழிபடுவர்களது துன்பங்களை நீக்கிப் பொன்னுலக வாழ்வையுந் தருவான்.
திருச்சிற்றம்பலம் கோயிற் கொடிய நமன்மர் கூடாத வகை விடுவன் காவிற்றிகழ் திருநாரைப் பதியிற் கரும் பனைக்கை மேவற்கரிய இருமதத் தொற்றை மருப்பின் முக்கண் ஏவிற் புருவத்திமைய வன்றான் பெற்ற யாணையையே!
இதன் பொருள்: பரமேஸ்வரனின் திருமைந்தனான. இருமதம் பொழிந்து கொண்டிருக்கும் யானை முகத்தனையும். ஒற்றைத் தந்தத்தையும், கருநீலம் பொருந்திய துதிக்கையையும் உடைய இவன் திருநாரையூரில் எழுந்தருளியுள்ளான். இவனை வணங்கி, வழிபட்டால், கொடிய சூலமேந்திய யமனின் தூதுவர்கள் கையில் சிக்காமல் நாம் நல்வாழ்வு வாழ வகையுண்டு என்றவாறு விநாயகப் பெருமானை வழிபட்டால் வரும் பேறுகளைக் கூறிய நம்பியாண்டார் நம்பிகள் எதிர்முறை முகத்தால் இவரை வழிபடாவிட்டால் ஏற்படும் துன்பங்களையும் பின்வரும் பாட்டில் கூறியுள்ளார்;. எனவே நாம் நாளும் வழிபட வெண்டுமென்பது வற்புறுத்தப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் அமரா அமரர் தொழுஞ் சரண்நாரை பதிஅமர்ந்த குமார குமரற்கு முன்னவனே கொடித் தேர்அவுணர் தமரா சறுத்தவறன்னுழைத் தோன்றினனேஎன நின் றமரா மனத்தார் ஆழ்நரகத்தில் அழுந்துவரே.
இதன் பொருள் : திருநாரையூரில் எழுந்தருளியுள்ள குமரா ! திரிபுராதிகளை அழித்த சிவன் திருமைந்தா ! தேவேச ! தேவர் தொழும் திருவடிகளையுடையவனே! முருகனுக்கு மூத்தவனே ! என நின்னை வணங்கா மனமுடையவர்கள் நரலோகத்தை அடைந்து துன்பப்படுவார்கள். (பின்வரும் பாடலால் அவரை வழிபடுவார்களைத் துன்பம் நெருங்கவும் முடியாது என்றபடி)
திருச்சிற்றம்பலம் மருப்பை யொருகைத் போண்டு நாரையூர் மன்னும் பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே யவரை வருந்த எண்ணுகின்ற மலம்.
இதன் பொருள் : ஒற்றைத் தந்தைத்தைத் தன் திருக்கரத்திலே கொண்டு விளங்கும் திருநாரையூரில் நிலைபெற்று எழுந்தருளியுள்ள விநாயகப் பொருமானைப் பக்தியுடன் வழிபடுவோரைத் துன்பம் நெருங்குமா? நெருங்க முடியாது. நெருங்கின் அதன் கதி என்னவாகும். நெருப்பையுண்ண எண்ணும் எறும்பு கதிதான் என்றவாறு.
திருநாவுக்கரசர் – தேவாரம் - கோயில்
திருச்சிற்றம்பலம் அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூ மிசை என்னம் பாலிக்குமாறு கண்டின் புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.
தினமும் மதியம் சாப்பிடும்போது மேலே குறிப்பிட்டுள்ள திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பாடலை மனமுருக ஒருமுறை கூறி விட்டு சாப்பிட்டால் வீட்டிலும், நாட்டிலும். எங்கும் உணவுப் பஞ்சம் வராது.
மேலும் உணவு உற்பத்தி அதிகமாகி உலக மக்கள் அனைவரும் நலமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை
சுபமஸ்து |