Donation
 
செய்திகள் & நிகழ்வுகள்



 

சேவை உணர்வு

THIRUCHITRAMBALAM

கவிதை

ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி
நான் செய்தன அனைத்தும் சுயநலமற்ற வினையன்றி
வேறு ஊறு விளைவிக்கும்
நோக்கம் விலக்கின என்று கூற வியலுமெனில்
அவன் பிறவி பயன் பொதிந்தது அவன் வாழ்வு
வெற்றி வாய்ந்தது

            அகத் தூய்மை பொண்டவர் கங்கை தன்னை கையருகில் கமண்டலத்திலும் காண்பார் எனும் பழமொழிக்கு இத்தகு சான்றோர்கெனவே இயற்றப்பட்டது.

பாரத பிரதமர் ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மன அமைதியில் இருந்து கிடைத்தது.
தமிழாக்கம் - டாக்டர் கி. வேங்கட சுப்பிரமணியன்
நன்றி ஒரே நாடு                    
இந்த கவிதையில் உள்ளபடி உங்களுடைய வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

சேவை உணர்வு

            என் வாழ்க்கையின் லட்சியம் இறைவனுக்கு சேவை செய்வது சாதாரணமாக நமது எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படை சுயநலம் தான். சுயநலம் எங்கிருக்கிறதோ அங்கு இறைசிந்தனை வராது என்கிறார். சுயநலமின்றி செயல்படுவதை வட மொழியில் மித்ர போஜனம் என்று சொல்லுவார்கள் என்று ஸ்ரீ ராம கிருஷ்ன பரமஹம்சர் விளங்குகிறார்.

            சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் அவரது பிள்ளைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும் - சுவாமி விவேகானந்தர்.

நன்றி ஸ்ரீ-ராமகிருஷ்ணவிஜயம்

ஆன்மீகம் அறிவோமா?

            எவன் ஒருவன் தனக்கென்று ஒன்றுமே வைத்துக் கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும். தன் ப்ராணனே போனாலும் சரி இன்னொரு ஜீவனை நம் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்.

            அன்னதானத்தின் சிறப்பை உணர்த்த பெரிய புராணத்திலிருந்து ஒரு பகுதி. மகா தரித்திரத்தில்
கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இளையான்குடி மாற நாயனாரிடம் ஒரு சிவனடியார் பிச்சை கேட்டு வந்த போது அவர் ஈஸ்வரனே இப்படி வந்திருக்கிறார் என்று நினைத்தார். கொட்டுகிற மழையிலே வயலுக்கு போய் அங்கே அன்று விதைத்திருந்த நெல்லை பொறுக்கி எடுத்துவந்து சிவனடியாருக்கு பிட்சை பண்ணினார். நிஜமாகவே அந்த சிவனடியார் பரமேஸ்வரன் தான். அப்படியே காட்சி கொடுத்து மோட்ஷம் கொடுத்தார்.

            எல்லா தானங்களிலும் அன்னதானம் தான் விசேஷம். கீதையில்
(3-13) எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடி சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனே தான் அணுபவிக்க வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்து கொள்ள மாட்டார்கள். பிறருக்கு போடாமல் தான் மட்டுமே திண்கிறவன் சாதம் சாப்பிடவில்லை. பாவத்தையே சாப்பிடுகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

            அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் இதிலேதான் ஒருத்தரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு,. உடை, நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன். அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிறபோது தான் ஒருவன் என்னதான் முட்ட முட்ட சாப்பிட்டாலும் ஒர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. போதும் போதும் என்று சொல்கிறான். அந்த அளவுக்கு மேல் மன்றாடவே செய்கிறான். இம்மாதிரி ஒருவன் பூர்ண மனதோடு திருப்திதெரிவிக்கிற போது தான் தானத்தின் பலன் பூர்ணமாக கிடைக்கும்.
காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்
நன்றி தினமலர் 6.11.2001

சுபமஸ்து

 
 
46242
 
 
 
  Copyright © Sri Pollap Pillayar Annadhaanam Trust.All rights reserved Designed by : DESERVE TECHIES