திருச்சிற்றம்பலம்
அன்னதானப் பாடல்கள்
திருக்குறள்
1. ஈகை ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225))
தவ வலிமை உடையாருக்கு தம் பசி பொறுத்தல் அவர் வலிமையும் தாங்க முடியாது பசியை ஈகையால் போக்குவாராக வலிமைக்கு அடுத்தபடிதான் தவத்திலும் தானம் சிறந்தது.
2. புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231)
ஏழைகளுக்கு வழங்குக. புகழ் பெற வாழ்க. அப்புகழ் அல்லது மக்கள் உயிருக்கு பயன் தருவது வேறொன்றில்லை. 3.அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் பழி. (குறள் 226)
ஒருவன் பொருளை சேர்த்து வைக்குமிடம் ஏழையின் வயிறு. பெரும் பசியைபோக்குக. செல்வம் பெற்றான் தனக்குதவ வைக்கும் கருவூலம் பசி போக்கும் உணவேயாம். 4.பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (குறள் 322)
தம்மிடம் உள்ளவற்றை பகுத்துக் கொடுத்து தாமும் உண்டு பல உயிர்களையும் துன்புறாமல் காத்தல் நூலாசிரியர் தொகுத்துக் கூறும் அறங்களுள் தலைச் சிறந்ததாகும். 5.இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள. (குறள் 223)
இரந்து வந்தவர்க்கு என்னிடம் இல்லை எனும் துன்ப சொல்லைக் கூறாமல் ஈதல் நற்குடிப் பண்பு உடையானிடத்தே உள்ளன. .
மணிமேகலை – சீத்தலை சாத்தனார்
தன்னுடைய மணிமேகலை காப்பியத்தில் பசிப்பிணியென்னும் பாவி அதை தீர்த்தவர் பெருமையைக் கூற என் நாவினால் முடியாது என்றும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் அன்னதானத்தின் சிறப்பை வலியுறுத்திள்ளார்.
சுபமஸ்து |